Airtel & Jio: வாய்ஸ் கால்களுக்கு தனி ரீசார்ஜ் – பண்ணுங்கள், கவலை வேண்டாம்!
Airtel மற்றும் Jio ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. கடந்த ஆண்டு விலை உயர்வால் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் SMS சேவைகளுக்காக தனி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், Airtel மற்றும் Jio புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
Jio-வில், ₹458 ரீசார்ஜில் 84 நாட்களுக்கு அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 SMS கிடைக்கும், மேலும் ₹1,958 ரீசார்ஜில் 1 வருடத்திற்கு அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3,600 SMS வழங்கப்படுகிறது. இதேபோல், Airtel-ல் ₹509 ரீசார்ஜில் 84 நாட்களுக்கு அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 SMS, ₹1,999 ரீசார்ஜில் 1 வருடத்திற்கு அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3,600 SMS கிடைக்கும்.
இந்த புதிய திட்டங்கள், “எனக்கு டேட்டாவே வேணாம்” என்று கூறும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் தேவையான சேவைகளை எளிதாகப் பெற முடியும், மேலும் வாய்ஸ் கால்கள் மற்றும் SMS சேவைகளை மட்டுமே பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளன.
Comments are closed.