புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது CBR நிறுவனம்…!
ஹோண்டா நிறுவனம் CBR650R மற்றும் CB650R ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா CBR 650R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.99 லட்சமாகவும் ஹோண்டா CB650R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பைக்கிலும் 649 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12,000 ஆர்.பி.எம். இல் 93 ஹெச்.பி. மற்றும் 6,500 ஆர்.பி.எம். இல் 63 என்.எம். ஆற்றலை உருவாக்கும். இந்த பைக்குகளுக்கான டெலிவரி அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.