விழிப்புடன் இருங்கள்! டிஜிட்டல் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
மக்களின் அறியாமை, அச்சத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்கு இக்குற்றவாளிகள் சமீபத்தில் கையில் எடுத்துள்ள ஆயுதம்; காவல்துறை அதிகாரி அல்லது சட்ட அதிகாரிகள் போன்று நடித்து ஏமாற்றுவது ஆகும்.
‘Digital Arrest’ மோசடி என அழைக்கப்படும் இந்த புது தந்திரம், சட்டம் மற்றும் சட்ட சார்ந்த சிக்கல்கள் குறித்த புரிதல் இல்லா மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி, அவர்களை இந்த டிஜிட்டல் மோசடிக்கு இரையாக்குகிறது. ‘Digital Arrest’ மோசடி என்பது ஒரு வகையில் ஆள்மாறாட்ட மோசடி ஆகும்; அதாவது, மோசடி செய்யும் நபர் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் வழியாக தன்னை ஒரு சட்ட அதிகாரியாக அறிமுகம் செய்து மோசடியில் ஈடுபடுகின்றார்.
பெரும்பாலும் இவர்கள், நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் – இந்த குற்றச் சம்பவத்திற்காக உங்களை கைது செய்ய வாரண்ட் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட இந்த குற்றத்தில் இருந்து உங்களை விடுவிக்க உடனடியாக பணம் செலுத்த வேண்டும் அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். தவிர்க்கும் பட்சத்தில், கைது செய்வோம் என அச்சுறுத்துகின்றனர்.
‘Digital Arrest’ மோசடி செய்பவர்களின் நோக்கம் உங்களை அச்சுறுத்தி பணத்தை பிடுங்க வேண்டும் என்பது மட்டுமே. இதற்காக அவர்கள் மின்னஞ்சல் வழியாகவோ, குறுஞ்செய்தி, சமூக ஊடகங்கள், வீடியோ அழைப்புகள், தொலைப்பேசி அழைப்புகள் என பல்வேறு ஊடகங்கள் வழியாகவோ உங்களை தொடர்புகொண்டு, தங்களை ஒரு சட்ட அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, அச்சத்தை உண்டாக்கி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்த செய்திகளில் அரசாங்கத்தின் போலி முத்திரைகள் அச்சிடப்பட்டு இருக்கலாம், லோகோ இடம்பெற்றிருக்கலாம், வரும் அழைப்புகளின் எண் நம்பத்தகுந்த வகையிலும் இருக்கலாம். சமூக ஊடக கணக்குகள் அல்லது செய்தியிடல் சேவைகள் மூலமாகவும் இந்த மோசடிக்காரர்கள் உங்களை அணுக முயற்சிக்கலாம். மோசடியில் ஈடுபடும் இவர்கள் தங்களை ஒரு சட்ட அதிகாரியாக காண்பித்துக்கொள்ள, காவல்துறை போன்ற வடிவமைக்கப்பட்ட அறையில் சீருடையுடன் அமர்ந்துக்கொண்டு உங்களுக்கு வீடியோ கால் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மோசடிக்காரர்களின் இத்தனை மெனக்கெடல்களும் உங்களை ஒரு குற்றவாளி என நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக தான்; உங்களை குற்றவாளி என நீங்கள் நம்பி, இந்த குற்றத்திற்கான தண்டையில் இருந்து தப்பிக்க பணத்தை செலுத்துவது அல்லது முக்கியமான தகவல்களை பகிர முன்வருவது என உங்களை அவர்களின் வழிக்கு கொண்டு வருவதே அவர்களது முக்கிய நோக்கம் ஆகும்.
சந்தேகத்திற்கு இடமான இணைய செயல்பாடுகள் மற்றும் மோசடி சம்பவங்களுக்காக உங்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டிருப்பதாகவும், அதற்கான விசாரணை பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும்; மோசடிகாரர்கள் உங்களிடம் கூறலாம். குற்றத்திற்கான கைது / தண்டனைகளை தவிர்க்க உடனடி அபராதம் (பெரும்பாலும் கிரிப்டோ கரன்சி அல்லது கிப்ட் கார்ட் போன்றவை) செலுத்த கோரி உங்களை அச்சுறுத்துவர். அல்லது, உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ளுமாறும் மிரட்டுவர். மோசடிக்காரர்களின் இந்த சூழ்ச்சி வலையில் நீங்கள் சிக்க தவறினால்; அதாவது, மோசடிக்காரர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அவர்களின் சட்டப்பூர்வத்தன்மையை (சட்ட அதிகாரி தான் என்பதற்கான ஆதாரம்) குறித்து கேள்விகள் எழுப்பினால், அபராத தொகை அதிகமாகும் என அச்சுறுத்த முயற்சிப்பார்கள்.
இச்சூழ்நிலையில் தான் PhonePe-ன் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், இந்த ‘Digital Arrest’ மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என ஆய்வு செய்து, விரிவான உதவிக்குறிப்புகளை பகிர்ந்துள்ளனர்!
உங்களை தொடர்புக்கொள்ளும் முகம் அறிய நபர், ஒரு ‘Digital Arrest’ மோசடியாளராக இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், இதன் போது அமைதியாக இருப்பதும் – உடனடி பதில்களைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், இந்த மோசடிக்காரர்கள் மக்களின் அச்சத்தை பயன்படுத்தியே தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
குறிப்பிட்ட இந்த அழைப்பின் உண்மை நிலையை அறிய, அழைப்பில் குறிப்பிடப்பட்ட ஏஜென்சியை நேரடியாக தொடர்புக்கொள்வது நல்லது. சந்தேகத்திற்குறிய இந்த அழைப்புகள், செய்திகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கலாம்; இதன் மூலம், இதுப்போன்ற மோசடிகள் இனி நடக்காமல் தடுக்கவும், மற்றவர்களை எச்சரிக்கவும் முடியும். அழைப்புகளின் ஒருவேளை நீங்கள் உங்களின் தனிப்பட்ட விவரங்களை கவனக்குறைவாக பகிர்ந்துக்கொண்டால், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றுவது, வங்கி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை பகிர்ந்திருப்பின் வங்கிக்கு தெரிவிப்பது நல்லது.
இணையவழி மோசடிகள் மற்றும் ஃபிஷிங் முயற்சிகளில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் உங்கள் கைப்பேசி, மடிக்கணினி போன்ற மின் சாதனங்கள் up-to-date ‘security software’ கொண்டிருப்பதை உறுதி செய்யுங்கள். கூடுதல் பாதுகாப்பிற்கு உங்கள் கணக்குகளில் two-factor authentication (2FA) அம்சத்தை உபயோகியுங்கள். இணையம் வழியே நடக்கும் இத்தகைய குற்றங்கள், தந்திரங்கள் குறித்து நன்கு அறிந்திருங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இது தொடர்பான புரிதலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
PhonePe மூலம் மோசடிக்காரர்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், PhonePe செயலியிலோ அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணான 080–68727374 / 022–68727374 என்ற எண்ணிலோ அல்லது PhonePe-ன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் வழியாகவோ உடனடியாக புகாரளிக்கலாம். மற்றும், உங்கள் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல்துறை பிரிவிலும், உங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசடி அனுபவம் குறித்து புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ எனும் இணைய பக்கத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது சைபர் கிரைம் பிரிவு உதவி எண்ணான 1930-க்கு தொடர்பு கொள்ளலாம்.
Comments are closed.