ஐபிஎல்லுக்காக ரூ.195-க்கு ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஐபிஎல் தொடங்கவிருப்பதை முன்னிட்டு ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய சில ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை என்ன?
தற்போது எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இந்தியாவே கொண்டாடும் ஐபிஎல் திருவிழா அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இலவசமாகவே ஜியோ சினிமாவில் பார்க்க முடிந்திருக்கும். ஆனால், இந்த ஆண்டு அந்த வசதி இல்லை.
ஜியோவும் ஹாட்ஸ்டாரும் இணைந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டாராக இருந்தது ஜியோ ஹாட்ஸ்டாராக மாறியிருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால், இலவச ஐபிஎல் இனி இல்லை. ஹாட்ஸ்டாருக்கு வழக்கமாக சப்ஸ்கிரிப்ஷன் செய்தால் மட்டுமே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வாடிக்கையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.
இதற்கு புதிய தீர்வாக, ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்திருக்கிறது ஜியோ. இந்த ரீசார்ஜ் திட்டங்களானது சரியாக மூன்று மாதங்கள் வரையிலான வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. அப்படியென்றால், ஐபிஎல் தொடர் தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தத் திட்டங்களை பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டிருக்கிறது ஜியோ. அவை என்னென்ன திட்டங்கள், அதனால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் எனப் பார்க்கலாம்.
ரூ.195 மதிப்புடைய ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்:
இது ஒரு ரீசார்ஜ் திட்டம் கிடையாது, டேட்டா பேக் மட்டுமே. அதாவது, ஏற்கனவே அடிப்படையான ரீசார்ஜ் திட்டத்தோடு கூடுதல் திட்டமாக இந்த 195 ரூபாய் கிரிக்கெட் பேக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 30 GB, 40 GB ஆகிய டேட்டா பேக்குகள் போல இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கூடுதல் திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் 15 GB டேட்டாவைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்துடன் 3 மாதங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் வசதியும் கொடுக்கப்படுகிறது. கூடுதல் டேட்டா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் சப்கிரிப்ஷன் இரண்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும். 5G வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படாது. அவர்கள் ரூ.149-க்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை அந்த செயலியிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
15 GB டேட்டா மற்றும் 3 மாதங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை தனித்தனியே வாங்கினால் எவ்வளவு செலவாகும் எனப் பார்க்கலாம். மேற்கூறிய வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் 3 மாதங்களுக்கு ரூ.149. 12GB டேட்டாவை ரூ.139-க்கு வழங்குகிறது ஜியோ. 3 GB-க்க கூடுதலாக ரூ.48 செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்கள் ரூ.336 செலவு செய்ய வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக ரூ.195-க்கே 3 மாத ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் 15 GB டேட்டா ஆகிய அம்சங்களைக் கொடுக்கிறது ஜியோ.
ரூ.949 மதிப்புடைய ஜியோ ரீசார்ஜ் திட்டம்:
ரூ.195 திட்டத்தைப் போல இல்லாமல், ரூ.949 மதிப்புடைய இது ஒரு முறையான ரீசார்ஜ் திட்டமாகும். 84 வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 2 GB டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால், நாளொன்று 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 2 GB டேட்டா வழங்கக்கூடிய சாதாரண திட்டம் ரூ.899-க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 90 நாட்கள் வேலியிட்டியைக் கொண்டிருக்கிறது. இத்துடன் கூடுதலாக ரூ.49 சேர்த்து மேற்கூறிய ரூ.949 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
Comments are closed.