ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ…!
Aadhaar update | உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை ஆன்லைனில் நேரடியாக அப்டேட் செய்ய முடியாது. அதற்கு நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்குத்தான் செல்ல வேண்டும்.
ஆதார் அட்டை இப்போது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்த சிறிய வேலைக்கும் ஆதார் அவசியம். அத்தகைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது நிதி பரிவர்த்தனைகளும் ஆதாருடன் செய்யப்படுவதால் மொபைலுக்கு வரும் OTP மிகவும் முக்கியமானது. இருப்பினும், பலர் அவ்வப்போது புதிய மொபைல் எண்ணைப் பயன்படுத்துகின்றனர்.
ஆதாரில் பழைய எண் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் போனுக்கு OTPகள் அனுப்பப்படாது. அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக தங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும். UIDAI ஆன்லைன் போர்ட்டலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன், ஆதாரில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிமையானதாகிவிட்டது. இப்போது அவர்கள் ஆன்லைனில் தங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றலாம். அந்த செயல்முறை என்ன என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி என்பது குறித்த படிப்படியான வழிமுறைகள்:
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை ஆன்லைனில் நேரடியாக அப்டேட் செய்ய முடியாது. அதற்கு நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்குத்தான் செல்ல வேண்டும். இருப்பினும், உங்கள் அப்பாயின்ட்மென்ட்-ஐ ஆன்லைனில் பதிவு செய்யலாம். உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது என்பது குறித்த படிப்படியான வழிகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
- முதலில், UIDAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- ஹோம் பேஜ்-க்கு செல்ல, உங்களுக்கு விருப்பமான மொழியை செலக்ட் செய்யவும்.
- ஹோம் பேஜ்-க்கு சென்றதும், ’மை ஆதார்’ என்ற மெனுவில் இருந்து ‘கெட் ஆதார்’ என்பதைக் கிளிக் செய்து, ‘புக் அப்பாயிண்ட்மென்ட்’ என்பதை கிளிக் செய்யவும்.
- அப்பாயிண்ட்மென்ட்-ஐ புக் செய்ய, உங்கள் சிட்டி இன் பெயரை என்டர் செய்ய வேண்டும்.
- இப்போது, உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா கோட்-ஐ என்டர் செய்யவும். பின்னர் ‘சூஸ் தி அப்டேட்’ என்பதில் இருந்து மொபைல் நம்பர் அப்டேட் என்பதை செலக்ட் செய்யவும்.
- உங்கள் பெயர், உங்கள் UID எண் மற்றும் உங்கள் சிட்டி போன்ற பிற தொடர்புடைய தகவல்கள் போன்ற குறிப்பிட்ட விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
இதையும் படிக்க: M3 சிப் மூலம் இயங்கும் புதிய ஐபேட் ஏர் இந்தியாவில் அறிமுகம்…! விலை விவரங்கள் இதோ…
- ஆதார் சேவா கேந்திராவில் உங்கள் அப்பாயின்ட்மென்ட்-க்கு வசதியான தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யவும். இந்த விருப்பங்களை தேர்ந்தெடுத்த பிறகு, பார்ம்-ஐ சப்மிட் செய்யவும்.
- இதற்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.பின்னர் நீங்கள் ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று, உங்கள் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷனை முடிக்க வேண்டும். பின்னர், அவர்கள் அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (URN) அடங்கிய அக்னாலெட்ஜிமென்ட் ஸ்லிப்-ஐ ஆதார் நிர்வாகி உங்களுக்கு வழங்குவார்கள். யுஆர்என் எண் மூலம் அப்டேட் ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம். உங்கள் மொபைல் எண் 90 நாட்களுக்குள் மாறும்.
Comments are closed.