திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.06 கோடி வந்தது
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.06 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி , இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 06 லட்சத்து 20ஆயிரத்து 548, தங்கம் 2 கிலோ 150 கிராம், வெள்ளி 3கிலோ 580 கிராம், 103 வெளிநாட்டு பணத்தாள்கள், 489 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
Comments are closed.