அட்வான்ஸ் புக்கிங்கில் 100 கோடியை தாண்டுமா ?வெறித்தனமான வசூல் வேட்டையில் GOAT.

உலகளவில் 6000 ஸ்க்ரீன்களில் இப்படம் வெளிவருகிறது என சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 1100 ஸ்க்ரீன்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.அட்வான்ஸ் புக்கிங்:இந்த நிலையில் GOAT திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாம்.படம் வெளிவருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், கண்டிப்பாக அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ. 100 கோடியை GOAT திரைப்படம் கடந்துவிடும் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

- Advertisement -

Comments are closed.