இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
சென்னை: நடிகை நயன்தாரா சில மாதங்களாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்பட பூஜையில் கலந்து கொண்ட போது நடிகை மீனாவை இன்சல்ட் செய்தார் என்ற விமர்சனங்கள் பரவி வரும் நிலையில் இதற்கு மீனா நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நயன்தாரா ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டி வருகிறார். அவருடைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவருடைய திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பற்றி பல சர்ச்சையான செய்திகளும் வெளியாகி கொண்டே இருக்கிறது. தனுஷோடு பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷோடு ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும்போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் தங்களுடைய காதல் காட்சிகள் சில நிமிடம் பயன்படுத்தியதற்காக தனுஷ் கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார் என்று நயன்தாரா பெரிய குற்றச்சாட்டு வைத்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு தனுஷ் தரப்பில் இது குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அடிக்கடி சர்ச்சை அதற்குப் பிறகு தன்னுடைய கம்பெனியின் பொருள்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் இவர் லேட் ஆக கலந்து கொண்ட போது அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு நபர், நயன்தாரா நம்மள மாதிரி சாதாரண மனுசங்க கிடையாது சொன்னா புரிஞ்சுக்கோங்க என்று பேசியதும் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதுபோல நயன்தாரா சில இடங்களில் புகைப்படம் எடுக்கும் போது அங்கு இருப்பவர்களிடம் முகம் சுளிக்கிறார் என்றெல்லாம் வீடியோக்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். நயன்தாரா விரதம் அவர் நயன்தாரா குறித்து பெருமையாக பேசி இருந்தார். இந்த திரைப்படத்தில் ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே நயன்தாரா அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விரதம் இருக்கிறார் என்று பெருமையாக பேசி இருந்தார். அதுபோல அந்த பூஜையில் நயன்தாரா மட்டுமல்லாமல் மீனா, குஷ்பூ, ரெஜினா, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், ஐசரி கணேஷ், ஹிப்ஹாப் ஆதி, மத்திய அமைச்சர் எல் முருகன் போன்ற பலர் கலந்து கொண்டனர். அப்போது நயன்தாரா மற்றும் மீனா இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது கூட நயன்தாரா மீனாவிடம் ஓவராக ஆட்டிட்யூட் காட்டினார் என்று அவர் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மீனா பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கண்டுக்காத நயன்தாரா அதுபோல சாமி படங்களிலும் மீனாவின் அசத்தல் நடிப்பு தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் கூட அந்த காலத்து அம்மனும் இந்த காலத்து அம்மனும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் மீம்ஸ் வைரலாகி வந்தது. அதுபோல இந்த திரைப்படத்திற்கான சூலாயுதத்தை மீனா மற்றும் குஷ்பூ இருவரும் நயன்தாராவிடம் கொடுத்தனர். அப்போது நயன்தாரா மீனாவின் முகத்தைப் பார்த்து கூட சிரிக்கவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல மீனாவும் குஷ்பூவும் மேடைக்கு வரும்போது நயன்தாரா குஷ்பூவை மட்டும் கட்டிப்பிடித்து அவரிடம் பேசினார். பக்கத்தில் நின்ற மீனாவிடம் முகத்தை பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிக்கவில்லை இதனால் நயன்தாரா வேண்டும் என்றே மீனாவை பல இடங்களில் அவமானப்படுத்தினார் என்று அவருடைய ரசிகர்கள் நயன்தாராவை திட்டி வருகிறார்கள். மீனாவின் இன்ஸ்ட்டா ஸ்டோரி S2S Web Technology, [14-03-2025 15:37] அதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் நயன்தாரா அப்படி எல்லாம் செய்யவில்லை என்று சப்போர்ட் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மீனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் “நிறைய ஆடுகளுடன் இருக்கும் சிங்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்”. “எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம் ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்று எதைப் பற்றியும் கவலைப்படாது” என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருக்கிறது. மேலும், “உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள். எல்லோரிடமும் அது இருக்காது” என்று மற்றொரு பதிவும் போட்டு இருக்கிறார். இந்த இரண்டு ஸ்டோரியையும் மீனா நயன்தாராவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பகிர்ந்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Comments are closed.