காவேரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து திருவெறும்பூர் மக்களுக்கு கொடுக்க திட்டம்!
திருச்சி மாநகராட்சியில் திருவெறும்பூர் பகுதியில் 63.7 கோடி ரூபாய் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது காவேரி ஆற்றில் இருந்து ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, 18,000 வீடுகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கப்படும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதனால் திருவெறும்பூரில் இருக்கும் நிறைய பேருக்கு குடிநீர் கிடைக்கும். 63.7 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. காவேரி ஆற்றில் இருக்கும் கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர் (MLD) தண்ணீர் எடுக்க முடியும் இந்த புது பம்பிங் ஸ்டேஷன் மூலமா ஆறு வார்டுகளுக்கு (38 முதல் 43 வரை) தண்ணீர் சப்ளை செய்வார்கள் சுமார் 90,000 பேர் அதாவது 18,000 வீடுகள் மற்றும் கடைகளுக்கு இந்த திட்டம் மூலமா குடிநீர் கிடைக்கும். இந்த திட்டம் மூலமாக திருவெறும்பூர் மக்கள் குடிநீர் பிரச்சனை இல்லாமல் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நம்பலாம்.
#trichy
#tamilmedia360
Comments are closed.