ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் பெற முடியுமா? மாதந்தோறும் ரூ.10,000 SIP முதலீடு..!

ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் .இந்த மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடியதாக இருக்கிறது என்றால் நீங்கள் 35 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் என்ற நிதி இலக்கினை எட்டிவிட முடியும். அதாவது இந்த 35 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை 40.80 லட்சம் ரூபாய். உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 5.51 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும். இதே 10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீட்டை 13 சதவீதம் லாபம் தரக்கூடிய நிதியில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்களது பணம் 32 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் என்ற மதிப்பை எட்டும். இந்த 32 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீட்டின் அளவு 39 .60 லட்சம் ரூபாய். உங்களுக்கு கிடைக்கும் லாபம் 5. 47 கோடி ரூபாய் ஆகும்.என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

Comments are closed.