விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்தம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தி பண்டிகை தொடா்ந்து வருவதால், பூ மார்கெட்களில் விற்பனை களைகட்டியுள்ளது.  அதற்கேற்ப பூக்களின் விலையும் கிடுகிடுவென உயா்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மல்லிகை 300 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும்,ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி விலை ரூ.500-க்கும் விற்பனையாகிறது.

- Advertisement -

Comments are closed.