செப் 12-ந்தேதி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை, 15-ந்தேதி மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும்செப்டம்பர் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. அந்த வகையில், ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய செப்டம்பர் 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் செப்டம்பர் 14-ந்தேதியும் , ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் செப்டம்பர் 15-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Comments are closed.