தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்…
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் டில்லி பாபு 2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர். டில்லி பாபு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். அதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.30 மணியளவில் காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவிற்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் டில்லி பாபு ’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.