அமெரிக்காவில் 21-ந்தேதி குவாட் உச்சி மாநாடு- பிரதமர் மோடி, ஜோ பைடன் பங்கேற்பு…
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. குவாட் அமைப்பின் 2024-ம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாநாடு இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அவர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து வருகிற 21-ந்தேதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் வில்மிங்டனில் குவாட் உச்சிமாநாடு நடக்கிறது. இதில் ஜோ பைடன், மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கிறார்கள். அப்போது, ஜோ பைடனை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தில் 22-ந்தேதி இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகிறார். 22, 23-ந்தேதிகளில் ஐ.நா.வின் எதிர்கால மாநாட்டில் உரையாற்றுகிறார். உலகில் போர், கிளர்ச்சி நடந்து வரும் சூழலில், சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.