திருச்சியில் ஜபில் நிறுவனத்தின் தொழிற்சாலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில், தமிழக அரசுடன் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஆப்பிள், சிஸ்கோ, எச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.