ஆதார் அட்டை புதுப்பிப்பு…இன்னும் சில நாட்கள் தான் இருக்கு…

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்ட்டை வழங்கி வருகிறது. இந்த ஆவணத்தில் உள்ள அடிப்படை தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறையும் அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிலுள்ள தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் UIDAI வலியுறுத்தி உள்ளது. ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 வரை உள்ளது. முன்னதாக விதிக்கப்பட்ட காலக்கெடுவில் இருந்து நீட்டிக்கப்பட்டது. இதற்கு இலவசமாக MyAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஆதாரை அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

Comments are closed.