ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்கை சந்தித்த சித்தார்த்-அதிதி…!
உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுகநியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா ‘இட்ஸ் க்ளோடைம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவத் தலைவரும் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பகிர்ந்து, “மறக்க முடியாத மேஜிக்கல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களை சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.