மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி! பயணிகள் மகிழ்ச்சி..!

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நேரடியாக விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் காலை 6:55 மணிக்கு முதல் விமானமும், இரவு 9:25 கடைசி விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை . மதுரை விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்களை இயக்க வேண்டும் என்று மதுரை நகர மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் மதுரை வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் இது குறித்து பரிசீலனை செய்தார். இதனை அடுத்து 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விரைவில் இதற்கான கால அட்டவணை பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.