ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13-ந் தேதி திறக்கப்படுகிறது…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரள மாநிலத்தில் இந்தாண்டு வரும் 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 13-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து வழங்கப்படும். தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்படவுள்ளதால் பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Comments are closed.