மண்பானையில் சமையல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரிய மண்பாண்டங்களை பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மண்பாண்டங்கள் மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது. மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக  இருக்கிறது. மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும்  வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.

- Advertisement -

Comments are closed.