வாரத்திற்கு 200 மில்லியன் ஆக்டிவ் சாட்ஜிபிடி யூசர்கள்… பெருமிதம் கொள்ளும் ஓபன்ஏஐ!

சாட்ஜிபிடி என்னும் செயற்கை நுண்ணறிவானது கடந்த 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் பல்வேறு டெக் ஜாம்பவான்களும் திணறி கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வகையில் தங்களின் சொந்த தயாரிப்பான சாட்ஜிபிடி-ஐ அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சியை உருவாக்கியதில் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு முக்கிய பங்குண்டு. இதற்கு முன் பல்வேறு நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் வழக்கத்தில் இருந்தாலும், முழுக்க முழுக்க மனிதர்களோடு உரையாடி தேவையான தகவலை துல்லியமாக அளிப்பதில் சாட்ஜிபிடி ஒரு படி முன்னே இருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஆரம்பத்தில் சாட்ஜிபிடியில் சில முக்கிய குறைகள் இருந்தாலும் அதற்கு பின் வந்த நாட்களில் அனைத்து குறைகளும் சரி செய்யப்பட்டு புதிய வெர்ஷன்களை அப்டேட் செய்வதில் ஓபன்ஏஐ நிறுவனம் கவனம் செலுத்தி வந்தது. வாரத்திற்கு 100 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தில் சிஈஓ சாம் அல்ட்மன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

Comments are closed.