மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து: 2 பேர் பலி…

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.  தீவிபத்து குறித்து அருகில் உள்ள போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்புத்துறையினர் தீயில் சிக்கியிருந்த  பெண்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இதில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விடுதியை நடத்தி வந்த இன்பா என்றவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.