பட்ஜெட் விலையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்….!

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி M சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M05 என அழைக்கப்படுகிறது. இந்த கேலக்ஸி M05 மாடலில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் ARM மாலி-G52 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ கோர் 6 ஓஎஸ் கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி M05 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது.

- Advertisement -

Comments are closed.