மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமார்….

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களிலும் ஆர்வம் உள்ளவர். ஏற்கனவே கார் பந்தயங்களில் பங்கேற்று உள்ளார். இந்த நிலையில் மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார்.இதுகுறித்து இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் போட்டியில் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஜித்குமார் விரைவில் வெளியிடுவார் என்றும் கார் பந்தயத்துக்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.