நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’… தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு !
அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், அதன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பரவலாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’யில் அஜித், த்ரிஷா, ரெஜினா கஸன்ட்ரா, அர்ஜூன், நிகில் நாயர், ஆரவ், சஞ்சய் சாரா, தசரதி என பலரும் நடித்துள்ளனர். அஜித்தின் ‘ஆரம்பம்’ பட ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட்ஸ், அனிருத் இசை என அசத்தலான டீமும் படத்தில் உள்ளனர். கடந்த மாத துவக்கத்தில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா என பலரும் வேறு படங்களுக்கு சென்று விட்டதால், டப்பிங் பேசுவதற்கு அவர்களிடம் தேதிகள் கேட்கப்பட்டிருக்கிறது. அஜித்தின் திரைப் பயணத்தில் இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் ஆண்டு ஆகையால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுருக்கின்றனர்.

Comments are closed.