கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா இன்று தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.  இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

- Advertisement -

Comments are closed.