சென்னையில் வரப் போகுது AI டேட்டா சென்டர்..!

பிரின்ஸ்டான் டிஜிட்டல் குழுமம் (Princeton Digital Group) சென்னை மற்றும் மும்பையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தரவு மைய நிறுவனமாக பிரின்ஸ்டான் டிஜிட்டல் குழுமம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்களில் தங்களுடைய தரவு மையத்தை நிறுவ இருப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் சீனா, சிங்கப்பூர் ,இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தற்போது டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.