பஸ் டிக்கெட் விலையில் விமானப் பயணம்!
இந்த ஆண்டின் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ரயில், பேருந்துகள் மட்டுமின்றி விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விமானக் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது பயணிகளுக்கு Grand Runway Fest Sale என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டிகோவின் பண்டிகை கால சிறப்புச் சலுகையில், ஆரம்ப விலையாக ரூ.1,111க்கு விமான டிக்கெட்டுகள் கிடைக்கும். இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பயணிகளுக்கான இந்த சிறப்புச் சலுகைகள் செப்டம்பர் 24, 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரை செல்லுபடியாகும். ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையல் முன்பதிவு செய்யலாம்.
Comments are closed.