அதிநவீன ஏவுகணையை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவு…!

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ‘சோனோபாய்ஸ்’ எனப்படும் அதிநவீன ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 52.8 மில்லயன் டாலர் (சுமார் ரூ. 443 கோடி) மதிப்புடைய இந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்க கோரி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், “நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில், சிறந்த நட்பு நாடான இந்தியாவுக்கு இந்த ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன. ஏவுகணைகளுடன் அது தொடர்புடைய சாதனங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன. பென்டகனின் இந்த கோரிக்கையை நாடாளுமன்றம் 30 நாட்களுக்குள் பரிசீலித்து தனது முடிவை தெரிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Comments are closed.