மீண்டும் மிரட்ட வருகிறது ‘அரண்மனை-5’…
கடந்த 2014-ம் ஆண்டு நகைச்சுவை மற்றும் திகில் கொண்ட ‘அரண்மனை’ படத்தை சுந்தர் சி. இயக்கினார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அரண்மனை-2, அரண்மனை-3 மற்றும் அரண்மனை-4 ஆகிய படங்கள் வெளிவந்தன. அரண்மனை-4 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக இதன் 5-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர்.சி இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘அரண்மனை-5’ படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments are closed.