சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன் தாஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும், அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.. இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.