முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவால், இரண்டு நாளில் டெல்லி முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். தலைமை செயலகத்திற்கு செல்லக் கூடாது, அரசு கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார். புதிய முதல் மந்திரி இரண்டு நாளில் அறிவிக்கப்படுவார் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.
Comments are closed.