தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகள் : திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே தடகளப் போட்டி நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் பவதாரணி 800 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டரிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற நிலையில் 16 வயதினருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் கிருத்திகா 200 மீட்டர் , 600 மீட்டர் , 400 மீட்டரிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற அவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் பயிற்சியாளர் விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments are closed.