பாடி பில்டர் இலியா யெஃபிம்சிக் மாரடைப்பால் மரணம்…!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான இலியா யெஃபிம்சிக் சிறந்த பாடிபில்டர் . தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் உயிர் இழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி அன்னா கூறுகையில் “அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், மார்பில் கையை வைத்து நன்றாக அழுத்தி முதலுவதி செய்தேன், ஆம்புலன்ஸ் வரும்வரை அவ்வாறு செய்தேன். இலியா உடல்நலம் பெற வேண்டும் என எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவருடன் எல்லா நாட்களும் செலவழித்தேன். இரண்டு நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. ஆனால், அவருடைய மூளை செயலிழந்ததாக டாக்டர்கள் செய்தியை என்னிடம் தெரிவித்தனர்” என்றார். ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Comments are closed.