பார்டர் – கவேஸ்கர் டிராபி: இந்தியா vs ஆஸ்திரேலியா – அடிலெய்ட் இரண்டாவது டெஸ்ட்

ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அடிலெய்ட் நகரில் நேற்று இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார்.

மற்ற வீரர்களும் நன்றாக விளையாடவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா, 13 ரன்னில் பும்ராவிடம் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸி அணி. ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி 38, மார்னஸ் லபுஷனே 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டு டெஸ்ட் போட்டியைக் காண மைதானத்துக்கு  முதல் நாளில் 36,225 பேர் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம், அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட்

போட்டியின் முதல் நாளில் அதிக ரசிகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

 

- Advertisement -

Comments are closed.