தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்

 

                          இந்தியாவின்  பிரபல தொழில் அதிபர் , டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 86.நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28-ல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்கு சேர்ந்தார். தேசம் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார் டாடா ரத்னா. டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி  உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச்சென்றார்.டாடா குழுமத்தின் தலைவராக 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார். கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.