தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 18/09/2024 முதல் 24/09/2024  வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.