சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை ரசித்துவிட்டு செல்வது வழக்கம். அது போல் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மீன்களை வாங்கவும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது. இதனால் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பாகவே காணப்படுகிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், கடலில் இருந்து ஏதோ கழிவுகள் ஒதுங்கியிருப்பதாக கடற்கரையில் கால் வைக்கவே அச்சப்பட்டு மணல் திட்டுகளிலேயே அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். இந்த மண்ணை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.