சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம்: கூடுதல் பேருந்துகள் இயக்கம்…
சென்னையில் நாளை (15/09/2024) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் நலன் கருதி நாளை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. நாளை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு 10 பேருந்துகள், தி.நகருக்கு 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.