செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் மொராக்கோவை வீழ்த்திய பிரக்ஞானந்தா…!

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று(11.09.2024) தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும். போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது. இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அவர் 30-வது காய் நகர்த்தலில் மொராக் கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார்.

- Advertisement -

Comments are closed.