செஸ் ஒலிம்பியாட்:தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்த்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் என்ற 2 பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி தங்கப் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம், அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.90 லட்சத்துக் கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
Comments are closed.