திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான (2024-25) விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுபிரிவு, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவினர்களுக்கு நடந்தது. இந்த போட்டிகள் செப் 10 முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அண்ணா விளையாட்டரங்கில் இப்போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி நிருவாக் துறை அமைச்சர் கே.என்.நேரு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000, இரண்டாம் பரிசு தலா ரூ.2000, மற்றும் மூன்றாம் பரிசு தலா ரூ.1000 வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
Comments are closed.