சீனா ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி போட்டி : மாள்விகா தோல்வி…!
சீனா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் உலக தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத், 2 முறை உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த யமாகுச்சியை மாள்விகா 10-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் 35 நிமிடங்களில் தோற்று வெளியேறினார்.
Comments are closed.