வரத்து குறைவால் திருச்சியில் தேங்காய் விலை இருமடங்கு அதிகரிப்பு…
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தேங்காய் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் அதன்விலை சீராக இருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, வடமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும், விளைச்சல் குறைந்து வரத்து குறைந்துள்ளதாலும் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் திருச்சி காந்தி மார்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் தற்போது ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் கடந்த வாரம் சிறிய அளவிலான ஒரு தேங்காய் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Comments are closed.