தவெக மாநாட்டில் அஞ்சலையம்மாள்க்கு கட் அவுட்.?

அஞ்சலையம்மாள், மகாத்மா காந்தி அவர்களால் ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அழைக்கப்பட்டவர். 1890-ல் கடலூரில் பிறந்தார், 1921-ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் தென்னிந்திய பெண்.

1927-ல் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக்கோரி போராட்டத்தில் சிறை தண்டனை பெற்றார். 1931-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று, ஆங்கிலேயர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிறைக்குச் சென்றார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக குரல் எழுப்பியவர். மற்றும் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். தவெக மாநாட்டில், அஞ்சலையம்மாள் மற்றும் வேலு நாச்சியாரின் கட் அவுட்கள் நிறுவப்பட உள்ளன, இது அவர்களின் தியாகத்திற்கான அங்கீகாரம் ஆகும்

- Advertisement -

Comments are closed.