டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!!

டென்மார்க்கில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் யூ ஹான் மோதினர். ஒரு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 18-21, 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று மாலை 4 மணி அளவில் நடக்கவிருக்கும் காலிறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் G.M.துஞ்சுங் உடன் மோத உள்ளார்.

- Advertisement -

Comments are closed.