டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்…!

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கிய முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 356 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்ததால், டெல்லியின் பல்வேறு பகுதிகள் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

- Advertisement -

Comments are closed.