சதுரகிரியில் தரிசனம் செய்ய 30-ந்தேதி முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி ..

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை 2-ந்தேதி வருகிறது. இதையொட்டி பக்தர்கள் வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.