கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் பட்டன்.. இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராம் நீண்ட காலமாக டிஸ்லைக் ஆப்ஷனை சோதித்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, இன்ஸ்டாகிராமில் 2 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள யூசர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது உலகின் நான்காவது பெரிய சமூக வலைதளமாக இருக்கிறது.
யூசர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆப்பிற்கும் அதன் தேவைக்கேற்ப புதுப்புது அப்டேட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் டிஸ்லைக் ஆப்ஷன் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்த உள்ளது.
போஸ்ட் மற்றும் ரீல் வீடியோக்களில் இடம்பெறும் கமெண்ட் பகுதியில் யூசர்கள் பயன்படுத்தும் விதமாக டிஸ்லைக் ஆப்ஷன் என்கிற ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாக இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் நீண்ட காலமாக டிஸ்லைக் ஆப்ஷனை சோதித்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசேரி ஒரு த்ரெட்ஸ் பதிவில், இந்த அம்சம் பயனர்களின் உரையாடல்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
Comments are closed.