காலில் தங்கம் அணியாததன் ரகசியம் தெரியுமா…?

தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக பெரியோர்கள் சொல்லி உள்ளனர். தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது.  கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன. தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும், தன்னம்பிக்கை உணர்வைத் தரும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது. தங்கத்தை லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை. மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.